மழை

ஆனந்த சிறை
மழைக்கம்பி
எண்ணுகிறேன்.
*******
மழை ஒரு தீக்குச்சி
அது
காதல் கவிதைகளை
கொளுத்திப்போடுகிறது.
********
மழை சில ஆபாச கவிதைகளை
எழுதிவிடுகின்றது
உன்னை நனைத்து.
*********
மழை
மேலிருந்து கீழாய் அல்ல
பாக்கவாட்டில் பொழிகின்றது
உன்னை பார்க்கும் போது.
*********
அழகான வாசற்கோலத்தை
அழித்து நின்ற மழைக்கும்
நன்றி சொன்னது மனது
உன் பொன்மேனிமுழுதும்
முத்துக்கோத்ததற்காக !
*********
வேர்வரை நனைக்காத
மழை என்ன மழை ?
உயிர் தொட்டு கசியாத
காதல் என்ன காதல் ?
*********
மழை!
காதல்.
நீ !
ஜலதோஷம்!