மின்னல் வரும் நேரம்

மின்னல் வரும் நேரம்

மின்னல் வரும் நேரம்
ஒரு மின்னல் -இவள்
பின்னல் ஜடை கண்டு
பின்னால் சென்றவர்கள்
இன்னும் -
இல்லம் திரும்ப வில்லை

வாடை காற்றில் வந்து நின்றாய்
வாசல் வந்து கோலம் போட்டேன்
கோடை சூட்டில் வெந்து போனாய்
குளிர்நீர் தந்து தாகம் தீர்த்தேன்

காலை ஒளியில் தங்கம் ஜொலிக்குது
காவிரி நதியில் கெண்டை துள்ளுது
மாலை நிலவில் மரகதம் மின்னுது
மானா மதுரையில் மல்லி சிரிக்குது

வளர்பிறை வளர்ந்து பௌர்ணமி ஆகும்
வட்டச் சிற்றிலை பேரிலை யா கும்
முத்தும் வைரமும் முத்தம் கொடுக்கும்
முகமூடி கொள்ளையருக்கு அது பிடிக்கும்

வானில் பறக்கும் பட்டம் வந்து
வசந்த காலத் தூது சொல்லும்
காணும் நண்பர் கூட்டம் வந்து
கவிதை பாடி வாழ்த்திச் செல்லும்

படகுத் துறையில் பாட்டுபாடி
பால் நிலவைக் காண்போமா
குடகு நாட்டு மலை சென்று
கொட்டு மருவியில் குளிப்போமா

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (25-Jan-14, 4:23 pm)
சேர்த்தது : sarabass
Tanglish : minnal varum neram
பார்வை : 23

மேலே