தமிழினமா தமிழீனமா
(ஒரு தமிழினப் போராளி மேடையில் பேசுகையில்,
இடைமெலிந்த பேரழகி இடையில் நுழைகிறாள்...
மக்கள் கவனம் அவள் பக்கம் சாய்ந்ததால்,
விழுந்த விதை இந்தக் கவிதை....)
நாவாடிக் கிடப்பதே என் பலமென்று நினைக்கையிலே,
பாவாடைக் கிளியொன்று பாதியிலே வந்ததினால்,
நாடோடி நடைதளர்ந்து நம் மக்கள் வரும் கதையை,
செவியோடு நிறுத்திவிட்டு செந்தமிழை தூக்கிலிட்டார்...
அவன் முன்னே அவளையும் அவள் முன்னே அன்னையையும்
அணுவணுவாய் பிறப்புறுப்பில் அரக்கர்கள் புணர்ந்தகதை,
சொன்னாலும் கேட்காமல் , உணர்விலதை சேர்க்காமல்,
பாவையவள் பின்னழகில் பார்வையினால் பாலமிட்டார்..
ஆயுதத்தால் அழித்துவிட்டான் மீதிப்பேரை அடைத்துவிட்டான்
சிங்களனே சிங்களனே என்று எண்ணி பேசி வந்தேன்!
தன் இனமே அழிந்தாலும் பெண் மணமே போதுமென்ற,
சிந்தை கெட்ட மனிதர்கள் முன் பேசுவதை விட்டுவிட்டேன் !!