வானத்துக்கு என் காதல் கடிதம்

நீ நீல புடவை கட்டி கொண்டு
அசையாமல் இருந்தலும் அழகுதான்

உன்னை காலையில் வெந்நீரில் குளிப்பாட்டி
இரவில் நிலா சோறு கெடுக்கும் அந்த பாட்டி யார்?

நீ தூக்கத்தில் சாய்ந்தபோது
தாங்கி பிடிக்க பஞ்சு மேத்தைகள் அலைகின்றன அங்கும் இங்குமாய்

நீ மென்மையாக சிரித்தாய்
என் மனது பறிபோனது என் பார்வையும் பறிபோனது

நீ கோபமாக பேசுபோது
குளிர் காற்று என்மீது வீசியது

நீ அழும்போது
என்னை நினைத்து கொள் நான் இருக்கிறேன் உனக்கு

நீ இரவில் அலங்கரித்து வருபோது
பூலோகத்தில் உள்ள எந்த பெண்ணும் நிகர் இல்லை

பறந்து விரிந்த உன் மனதில்
எனக்கு் ஓரு இடம் வேண்டும்

பறவை போல் வந்து தங்கிடுவேன்
என் வாழ்க்கை கடைசி மட்டும்.

எழுதியவர் : PAUL (26-Jan-14, 5:40 pm)
பார்வை : 384

மேலே