கதிர் தோன்றி மறையும்
கதிர் தோன்றி மறையும்,
கரு ஊன்றி வளரும்,
அதிகாலைக் குயில்களும்
அழகாகக் கூவும்.
தென்றலும் வீசும்,
தேய்பிறையும் பேசும்,
இரவு விண்மீன்களும்,
எப்போதும் ஒளிரும்.
வயல்களும் செடிகளும்,
வானுயர் மரங்களும்,
நமக்காக வாழ்ந்து,
நன்மைகளை ஈயும்.
செயற்கை உரங்களில்,
சீரழிந்த வனங்களில்,
இயற்கை அன்னை,
எப்படித்தான் வாழும்?