கணக்கு

ஒன்றும் ஒன்றும் இரண்டம்மா
ஒன்று கூடி வாழம்மா!
இரண்டும் இரண்டும் நான்கம்மா
இனிமையாகப் பாடம்மா!
மூன்றும் மூன்றும் ஆரம்மா
முயற்சி செய்து பாரம்மா!
நான்கும் நான்கும் எட்டம்மா
சேட்டை செய்தா கோட்டம்மா !
ஐந்தும் ஐந்தும் பத்தம்மா
படிப்பே நமது சொதம்மா !