பிஞ்சுகளின் சுமைகள்

காட்சி ஒன்று
பார்வைகள் அகன்று -இந்த
பிஞ்சுகளை கண்டு
என் சிந்தனைகள்
எனை சீண்டின.

ஏக்கங்களை தாங்கி
சிறுவர்கள் ஐவர்
புத்தகங்களை தூக்கி
சிறுவர்கள் இருவர்.
திசைகள் வேறு
சுமைகள் ஒன்று

வலிக்கும் தோள்களில்
சுமக்கும் சுமைகள்.
விழிகளில் ஏக்கம்.
வழிகளை தேடித்தேடி
பிஞ்சுபாதங்கள் வாழ்வின்
விதிபாதையில்........
நஞ்சுக்கொண்ட
சமுதாய சாலையில்......

திசைகள் வேறாக..
சுமைகள் ஒன்றாக...

பிஞ்சுகள் தோளில்
சுமைகள்...! - பார்க்கும்
நெஞ்சங்கள் மனிதில்
பாரங்கள்.
----------------------------------------------------------------------------

படத்திற்கு நன்றி : நண்பன் திரு.குமரிப்பையன்


-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (26-Jan-14, 8:16 pm)
பார்வை : 417

மேலே