கிழக்கு கடற்கரை 26122004

என்ன இந்த வாழ்கை போராட்டம்
நேர்த்தியான மனிதர்கள் மத்தியில்,

சிந்திய கண்ணீர் துளிகளுக்கு
இன்றும் ஒய்வு இல்லை,
அந்த நிகழ்வின் முடிவுக்கு பின்னால்

அந்தபுரமன என் வீட்டு
கொள்ளை புறத்தில்
காய்ந்து கிடக்கிறது

என் வீட்டு கன்று குட்டி
துவைத்த துணியாக,

குடிக்க தண்ணீர்
கிடைக்காமல் போன
நேரங்களில்

குளிக்கவும் வைத்து
உன்னுடன் (அழித்து)அழைத்து
சென்று விட்டாய்!

அன்று நாங்கள் இருந்த வீடு
இன்று என் சொந்தங்களின்
நினைவு சின்னம்,

இன்னும் உப்பு கரிக்கிறது
அவர்களின் கண்ணீர் துளிகள்
மட்டும் அல்ல

அவர்களை (கொன்று) கொண்டு
சென்ற நீயும் தான்

எத்தனை காலமாய் காத்திருந்தாய்
இந்த கிழக்கு கடற்கரையை
முத்தமிட,

நினைவுகள் நீங்காமல்
கண்ணீர் துளிகளுடன்
என் இரு விழியும் எழுதுகிறது

அந்த மரண ஓலத்தின்
இரகசியத்தை!

என்றும் அன்புடன்
சேர்ந்தை பாபு.த

எழுதியவர் : சேர்ந்தை பாபு.த (28-Jan-14, 10:02 am)
பார்வை : 102

மேலே