ஆதங்கம்
வாழைப்பழத் தோல் வழுக்கி,
காலையில் வரும் சூரியனே,
காத்திருந்தேன் என்னவளே,
கரம் பிடிக்கச் செய்த தாத்தாவே.
இது போன்றெல்லாம் ஏதோ
எழுதி - எழுத்து தளத்தின்
கழுத்தை நெறிக்க,
புரிந்தோ - புரியாமலோ,
தெரிந்தோ - தெரியாமலோ,
எழுதிவிடும் அன்பர்களே!
நியாயமாகச் சிந்தியுங்களேன்!
பூ விற்கும் கடைக்குள் சென்று,
மீன் விற்றல் தகுமோ?
சிறியவனின் ஆதங்கமாய்...
சில வரிகள் இறுதியாய்....
தங்கத்திலே சிறு குறை இருந்தாலும்,
தரத்தினில் குறைவதில்லை!
எழுத்துத் தளம்! - எங்கள் தங்கம்!!