தன்னம்பிக்கை கவிதை
என் தோல்வி சொல்லி சொல்லி
அடைக்கத்தான் பார்த்தார்கள்
அனைவரும் !
அதற்கு கொள்ளி வைத்து
துள்ளி நின்றேன் !
வெற்றி மட்டும் கண்டவருக்கு
சலிக்கத்தான் போகிறது !
நானோ சலிக்காமல் புசிப்பேன்
அதன் ருசியை !!
எட்டு வைத்த கால்களும்
விழுந்து தான் எழுந்தன....
நானும் ஒரு நாள் எழத்தான் போகிறேன் !!
ஈரமரம் என தூர போட்டவருக்கு
காய்ந்து தான் காட்ட போகிறேன்
நான் எறிவேன்
“தீயாய் என்று”