சேவை

ஏழை நாடுகளில் மருத்துவ வசதி குறைவாகவே இருக்கும். உயர்தர சிகிச்சை பெற, வெளி நாடுகளுக்குச் செல்ல வேண்டும். பணம் இருந்தால் சரி. ஏழைகளால் முடியுமா? இதற்காகவே, விமானத்தில் மருத்துவமனையை உருவாக்கி இருக்கிறது, பிரிட்டனின் ‘ஆர்பிஸ்’ (Orbis) மருத்துவமனை. இதில், 20 மருத்துவர்கள் பணியாற்றுகிறார்கள். இதுவரை 90 நாடுகளுக்குப் பறந்து சிகிச்சை அளித்துள்ளது. சென்ற ஆண்டு, கொல்கத்தா விமான நிலையத்தில் 10 நாட்கள் தங்கி, 80 பேருக்கு கண் அறுவைசிகிச்சை செய்தார்கள். மேலும், கண் மருத்துவர்களுக்கு உயர்தர சிகிச்சைக்கான பயிற்சியும் அளிக்கப்பட்டது. சமூக நோக்கத்துடன் செயல்படும் இந்தப் பறக்கும் கண் மருத்துவமனைக்கு, ஹாலிவுட் நட்சத்திரங்கள் நிதி உதவி செய்கிறார்கள். ஒரு ரூபாய்கூட வாங்காமல், விமானத்திலேயே சிகிச்சை என்பது ரியலி கிரேட்!

எழுதியவர் : முரளிதரன் (28-Jan-14, 2:21 pm)
சேர்த்தது : முரளிதரன்
Tanglish : sevai
பார்வை : 137

மேலே