கார் மேகமே

கார் மேகமே..

வாஞ்சையுடன் குஞ்சுக்கு
இரை புகட்டி
ஏஞ்சலென வாழ
வெயில் மழை தாக்கா
தனி கூடமைக்க
வலுவான தண்டு உண்டு

ஊஞ்சலென தாவி ஆட
கிளை உண்டு

பஞ்சமின்றி பசியாற்ற
காய்கனி உண்டென

நெஞ்சம் நிறைந்த மகிழ்வுடன்
பாடிப் பறந்த உயிர்விலங்கு
தஞ்சம் புகுந்த மரம்
தரணியில் அழிந்திட வேரோடு
வெட்டிசாய்க்கும் விலங்குமனிதன்
கைக்கு சோர்வு விலங்கிடவே

வெட்ட வெட்டத் தழைக்கும் வாழையென
மண்ணில் மரங்கள் எல்லாம்
வெட்டுப்படும் அக்கணமே
ஓங்கிய விருட்சமாகி எழுந்திடவே
கருணை பொழிவாய் கார்மேகமே..!!

.... நாகினி

எழுதியவர் : நாகினி (30-Jan-14, 9:28 am)
சேர்த்தது : Nagini Karuppasamy
Tanglish : kaar megame
பார்வை : 62

மேலே