கருப்பு வைரம் -நீ
கருப்பு வைரம்
நீ தான்...
துடிப்பு கவியினிலே
கண்ணீர்
வரவைத்தாய்...
குறும்பு வார்த்தைக்கும்
அரும்பு குரலுக்கும்
அடிமையாய் போனது
என் ஐம்புலன்...
மேடைக்கவிஞன்
நீ தான்,
என் மனம் என்னும்
மேடையில்,
மந்திரமாய் உன்கவிகள்..
முதல்வரி கேட்க
ஆர்வமாய்
செவிசாய்த்தேன்,
அடுத்தவரி கேட்டு
எனக்குள்ளே
ஏக்கம் கொண்டேன்.,
முழுகவியை நீ
முழுதாய் முடிக்கையிலே
மனக்கவலையாய்
என் கவிதிறந்தேன்..
பெற்ற தாய்
பெருமையினை,
உன் ஒருகவி சொல்ல,
என் இருவிழி கலங்க.,
கவியின் வலிமை
கண்ணீருக்கும்
தெரியக்கண்டேன்... !!!
வைரமுத்து அவர்களின்
கவிகேட்டு,
அறியாமல் என்
விரல்தொட்ட
கவி இது... !