ஏன் உனக்கு காதல் வரவில்லை

தாமரை இலை நீ
காதல் தடாகம் நான்
தாமரை இலையில்
தண்ணீர் நம் காதல் ...!!!
சமுத்திர ஆழம் காதல்
சமுத்திர கப்பல் நாம்
ஓட்டை விழுந்த படகில்
பயணம் செய்கிறோம் ...!!!
எறும்பு ஊர கற்குழியும்
என் நினைவுகள் ஏற
ஏன் உனக்கு காதல்
வரவில்லை ...!!!
கஸல் 632