விதவைக்கு வாழ்க்கை

விதவைக்கு வாழ்க்கை

பொட்டு இல்லாத
வட்ட நிலவுக்கு
பொட்டு வைக்க
விரும்புகிறேன் நான்!!!!

பூ இல்லாத
வசமுள்ள கூந்தலுக்கு
பூ வைக்க
விரும்புகிறேன் நான்!!!!

விலை இல்லாத
உன் புன்னகைக்கு
வாழ்க்கை தர
விரும்புகிறேன் நான்!!!!


மெட்டு இல்லாத
உன் கொலுசுக்கு
சங்கீதம் தர
விரும்புகிறேன் நான்!!!!

மகிழ்ச்சி இல்லாத
உன் சோகத்திற்கு
மறுமலர்ச்சி தர
விரும்புகிறேன் நான்!!!!

சுகந்திரம் இல்லாத
உன் வாழ்க்கைக்கு
வாழ்க்கை தர
விரும்புகிறேன் நான்!!!!

குறிப்பு:- விதவைக்கு வாழ்க்கை தர
விரும்பும் உங்கள் நண்பன்...!!!!

எழுதியவர் : இதயவன் (30-Jan-14, 10:10 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 93

மேலே