பள்ளிக்கூட நினைவு
ஒன்னாப்பு படிக்கையில
"ஓ" எழுத தெரியாம,
வாங்குன அடியில்,
நான் அழுததும்,
வாத்தி பயந்ததும்,
நியாபகம் வருகுது..!
மூனாப்பு படிக்கையில
அந்தபிள்ள மேல
கொஞ்ச ஆசையும்,
டீச்சர் மேல
கோடி ஆசையும்,
எத்தாடி எத்தனை
அழகு இன்னைக்கு... !
பத்தாப்பு படிக்கையில
பரிட்சை பேப்பர்ல
தப்புத்தப்பா கவிதை எழுதி
முழங்கால் தண்டனை
இன்னைக்கு வலிக்குதே..!
இங்கிலீசு பரிச்சைக்கு
கொண்டுபோன
பிட்டு பேப்பர் மேல,
தெரியாம
கையெழுத்து
போட்ட ராஜா சார்,
இன்னைக்கும்
சிரிப்புவருதே... !
படிப்படியா படிச்சு
பார்டர் மார்க்ல
பாஸ் ஆயிட்டு,
எங்க ஊரு கிராமத்துக்கு,
கலைக்டர் ஆன நினைவு,
மறக்க
முடியலையே,
காலேஜ் பரிட்சையிலும்
நினைக்க மறக்கலையே...