இன்னும் ஆங்கிலேயரின் அடிமையாய் நாம்

விருந்தாளியாய் வந்தவன் வியப்படைந்தான்..
நம் மண்ணில் நின்று நம்மை ஆட்சி புரிந்தான்..
அடிமை என்று பட்டம் தந்தான்..
நம் நாட்டு வளங்களை களவு கொண்டான்..

பல ஆண்டுகள் கழித்து இந்தியன் ஒன்றுபட்டான்..
அதன் விளைவாய் சுதந்திரம் தான் பெற்றான்..
மெல்ல மெல்ல மாற்றம் பெற்றான்..
அனுதின வாழ்வில் முன்னேற்றம் தான் கொண்டான்..

மன்னராட்சி மாறி மக்களாட்சி பெற்றான்..
அதை சிறிது காலத்தில் நீர்த்து போக வைத்தான்..
வஞ்சனை மிகுந்ததாய் அரசியல் மாற்றம் கொண்டான்..
பணத்திற்கு அவன் உரிமையை தான் விற்றான்..

பன்னாட்டு நிறுவனத்திற்கு நம் நாட்டில் இடம் கொடுத்தான்..
நம் நாட்டு நிறுவனத்திற்கு பெரிய அடி கொடுத்தான்..
விரட்டப்பட்ட ஆங்கிலேயன் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கப்பட்டான்..
மீண்டும் அவன் நம்மை நாகரிகத்தை காண்பித்து அடிமையாக்கி கொண்டான்..

பணத்திற்கு விற்கப்பட்ட நம் நாட்டு அறிவுகள்..
வளர்ந்தன அதை வைத்து பல நாடுகள்..
ஆனால் வீழ்ந்தது நம் நாடு..

அரசியல் சரி இல்லை..
இந்த நாடு சரி இல்லை..
என்று தன் தவறை உணராமல்
பழிகளை பிறர் மீது
சுமத்திய வண்ணம் இருக்கும் மாந்தர்களே..
விஞ்ஞானம் வளர்க்கிறோம் என்றுரைத்து,
விவசாயத்தை அழித்த ஓர் மூடர் கூட்டம் நீங்களல்லவா..

காலத்தின் மாற்றமாம்..
மக்களின் வளர்ச்சியாம் இது..
ஐந்து ஏக்கர் நிலம் தனை விற்று,
ஓர் மாடியில் அப்பார்ட்மெண்ட் என்னும் பெயரில் ஓரறை வீடு வாங்குவது வளர்ச்சியா..

முதலாளி வர்க்கம் வேறொரு பன்னாட்டு நிறுவனத்தின் கூலியாய் மாற்றம் பெற்றது வளர்ச்சியா..
இது வளர்ச்சியல்ல மனிதா அறிந்து கொள்,
நம் கலாச்சாரத்தை கெடுத்து,
நம் வாழ்வின் அச்சாணியை மாற்று ஓர் முயற்சி..

இன்று நீ பணத்துக்கு விழுந்தால் எழும்ப முடியாது..
கண்ணுக்கு தெரியாமல் தொடுக்கப்பட்ட போரிலிருந்தும் நம்மால் மீள முடியாது....!!!

எழுதியவர் : அரவிந்த் .C (31-Jan-14, 9:56 pm)
பார்வை : 232

மேலே