என்னை தேடி தாருங்கள்

சிறகு முளைத்து தான்
பறக்க வேண்டுமெனில்
நான் அதில் விதிவிலக்கு..

சமுதாயம் விதிகளுக்கு
தன கண்களை மூடிக்கொள்கிறது
விதி விலக்குகள் வரும்போது தான்
தன கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு
கவனிக்கிறது

என் நம்பிக்கையின்
கண்கள் அழுது வடிந்துகொண்டும்
அவநம்பிக்கையின் கண்கள்
பிரகாசமாகவும் இருக்கின்றன

என்னுடைய செயல்களுக்கு வரும்
விமர்சனங்களுக்கு பஞ்சமில்லை
யாருடைய கருத்தாகவோ,
யாருடைய கூற்றாகவோ
மாற்றப்பட்டு உலவுகிறேன் நான்

மரபு காவலர்கள்
கத்தியோடும்
கொள்கை காவலர்கள்
துப்பாக்கியோடும்
என்னை சுற்றி..

இந்த அமளி துமளிக்குள்
யாராவது ஒருவர்
"என்னை மட்டும் "
தேடிக்கொடுங்கள்..
உங்களுக்கு புண்ணியமாய் போகும்

எழுதியவர் : இளந்தென்றல் (1-Feb-14, 2:17 pm)
சேர்த்தது : இளந்தென்றல்
பார்வை : 58

மேலே