காதல் தந்த பாடம்
எந்த பள்ளியிலும்
பல்கலைலழகத்திலும்
நடத்தாத பாடத்தை
காதல் நடத்தியது
சிறு புள்ளியாய் தொடங்கி
சின்னா பின்னம் ஆனவரை
நவரசங்களையும் தந்துப் போனது
ரசனைகளை மட்டுமல்ல
ரணத்தையும் தந்து போனது.
கண்ட முதல் பொழுது மலர்ச்சி
உறங்க இயலாத இரவுகளில் கிளர்ச்சி
காதல் சொல்ல எடுத்துக் கொண்ட முயற்சி
உனக்காய் கவிதை எழுத மேற்க்கொண்ட
பயிற்சி
காதலை வெளிப்படுத்தி
உன் பதிலுக்காய் காத்திருந்த வலி கொண்ட பொழுதுகள்
நீ மறுத்ததினால் ஏற்பட்ட காயங்கள்
என் சுயம் மறந்து போன மாயங்கள்...
எத்தனையோ உணர்வுகளை உள்ளடக்கியதாய்
என் ஊமைக் காதல்