சிதலமடைந்து கொண்டிருக்கின்றேன்

நீதான்
என் கதவுகளை
மெல்ல தட்டிப் பார்த்தாய்..!!

நீதான்
அவற்றை
திறந்தும் பார்த்தாய்..!!

அந்த
காதல் காற்றும்
உன்னால்தான்
என் இல்லம் நுழைந்தது..!!

அழைத்தேன் நானும்
ஏனோ நீ
உள்ளே வர மறுக்கின்றாய்..!!

இந்த
முகவரி தவறு
என்று நீ நினைத்தாலும்..

திறந்தவருக்கே
இது சொந்தம்
என்று உனக்குத் தெரியாதா என்ன..!?

இப்பொழுது
எவரும் குடியில்லாத
வீடாக நானும்..
பொலிவிழந்து சிதலமடைந்து கொண்டிருக்கின்றேன்..!!

என் சுற்றமும்
ஏனோ
ஒலி இல்லா
உலகமாக மாறிவிட்டது..!!

எழுதியவர் : வெ கண்ணன் (3-Feb-14, 9:46 am)
பார்வை : 348

மேலே