வலி
பார்த்த மாத்திரத்தில் புன்முறுவல் பூக்கிறேன்
என் காதலி அல்ல
வாப்பா!!! என்று தோள் தட்டிகொடுக்கிறேன்
என் தோழனும் அல்ல
அவன் சொல்லும் விஷயம் எனக்கு
வேண்டாததாய் தோன்றினாலும்
'உம்' கொட்டுகிறேன்
என் ஆசிரியரும் அல்ல
அவன் கொடுக்கும் காகிதத்தை
ஏதோ வாழ்த்துஅட்டை போல பாதுகாக்கிறேன்
அவன் என் அன்பிர்கினியவனும் அல்ல
கடைசியாய் தேவைபட்டால் கூப்பிடுகிறேன்
என்றுகூறி விடைபெறுகிறேன்,
ஒரு மார்க்கெட்டிங் செய்பவனின் வலி
இன்னொரு மார்க்கெட்டிங் செய்பவனுக்கே தெரியும் என்பதால்.