பெண்மையின் வீரம்
பெண்ணவள் பெட்டகத்தில்
பாதுகாக்கும் கற்பினை
பலவந்தமாக களவுசெய்ய துணிந்தான்.
தீயில் சிக்கிய சேலைப் போல் - அத்
தீயவனிடம் சிக்கித் தவித்தாள்.
மானை விரட்டிய புலியைப் போல் - அப்பெண்
மான் புலியிடம் போராடியது.
மது உண்டப் போதையில் - அம்
மாதுவிடம் பாலியல் செய்தான்.
தீயில் கருகியவரை கிழித்த சேலையைப் போல்
தீயவனிடம் முடிந்தவரை தன்னைக் காத்தாள்.
புலி விரட்டிய மான் - அப் புலியையே
பலியிட துணிந்தது அப்பெண் மான்.
மது போதையில் தள்ளாடியவனை - பெண்மையின்
மானம் காக்க வெகுண்டெழுந்து வீழ்த்தினாள்.
பெண்ணினத்திற்கே புனிதமான
பெட்டகக் கற்பினை பாதுகாக்க - அக்கொடியவனை
புல்லினை அறுக்கும் வாளென - நெஞ்சில்
துணிவுக் கொண்டு பெண்மையின் வீரத்தை
தட்டி எழுப்பினாள் - இவள் வீரத்தால்
துவண்டு வீழ்ந்தான் தலை அறுபட்டு.
உயிரொன்றைக் கொல்வது நீதியல்ல.-என்றாலும்
உயிருக்கும் மேலான கற்பினை காப்பதில் -அவ்
உயிரைக் கொல்வதில் அநீதில்ல. - தீயவனோ
உயிரைக் காக்க மறந்தான். - பெண்ணவளோ
உயர்மானம் காக்க உயிர்பலி கொடுத்தாள்.
தப்பு கணக்குப் போட்டு தாழ்ப்பாள் போட்டான்.
தப்பு இதுவென தீர்ப்பாக தண்டனை அளித்தாள்.
கூட்ட வந்தவன் கழிந்துப் போனான். - இந்தக்
கணக்கில் கழிக்கவந்தவள் கூட்டல் ஆனாள்.
பெண்ணே உன் வீரம் வாழ்க. - உன்னைப் போல்
பெண்ணினமும் வீரம் கொண்டு வாழ்க.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
