தரிசன நேரங்களில்

அந்த
காலத்திற்குப் பின்னால்
நான் காத்திருக்கின்றேன்..!!

உனது திவ்ய தரிசனத்திற்காக..!!

தூரத்தில்
உன்னை கண்டதும்
முண்டியடித்து
வந்து பார்க்க முற்படுகின்றேன்..!!

முன் இருக்கும் காலம்
என்னை விடுவதாய் இல்லை..!!

எனக்கான
ஒரு தரிசனம் கிடைத்தது..!!

அந்த
தனிமையின் சந்திப்பில்
எனக்காக கிடைத்த தரிசன நேரத்தில்..

என் நினைவுகளில்
நினைத்தவற்றை எல்லாம்
முடிந்தவரை
பார்வையிலேயே சொல்லிவிடுகின்றேன்..!!

என் வேண்டுகோள்
எல்லாவற்றையும்
சொல்லிவிட முடியவில்லை..!!

பின் உள்ள
காலம் என்னை
தள்ளிக்கொண்டிருகின்றது..!!

எங்கே நான்
வார்த்தைகளால் கேட்டால்
பலித்துவிடாதோ.. என்ற பயமும் எனக்குள் இருக்கின்றது..!!

ஏற்றுக் கொள்ளப்பட்டதா என்றும் தெரியவில்லை.!!

எழுதியவர் : வெ கண்ணன் (2-Feb-14, 7:27 pm)
பார்வை : 89

மேலே