நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்

வழக்கம் போல் இன்றும் ஏதோ ஒரு பிரச்சனை வீட்டில் உண்டு என்றே சுகுமார் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு புறபட்டான்.
வாழ்க்கை சந்தோசமும் துக்கமும் கலந்தது.சில பிரச்சனைகள் நம்மால் சமாளிக்க முடியாது.சில பிரச்சனைகள் நம்மால் தீர்க்க முடியும்.
கல்யாணம் எல்லோர் வாழ்விலும் வரும்.ஆனால் அது வந்த பின்னே வாழ்க்கை மாறும்.சுகுமாருக்கும் மாறியது.
இயல்பாய் ஆரம்பிக்கும் பிரச்சனை மாமியார்
மருமகள் பிரச்சனை.பெண்ணால் ஒரு பெண்ணுக்கு பிரச்சனை.அமைதியான தாய்க்கு மருமகளால் பிரச்சனை.அமைதியான மருமகளுக்கு மாமியாரால் பிரச்சனை.இதற்கு பேசாமல் பிரச்சனை என்றே நான் தலைப்பு வைத்து இருக்கலாம்.
சண்டைக்கு காரணமே ஆண்கள் தான்.இப்படி சொல்ல காரணம் அவன் மீது தாயும் மனைவியும் வைக்கும் அன்பு கலந்த பாசம். சுகுமாருக்கும் அப்படிதான்.
தீர்ப்பு சொல்லும் நடுவர் தான் பிரச்சனையின் நாரதர்.ஆமாம் இவனால் ஏற்படும் சண்டையை இவன் தான் சமாளிக்க வேண்டும்.
முதியோர் இல்லத்தில் இருக்கும் பெரும்பாலான முதியோர் மருமகளின் உத்தரவின் பேரில் வந்து இருப்பார்கள்.இது எல்லா பெண்ணுக்கும் பொருந்தாது.ஆனால் அப்படியும் சிலர் உண்டு.வாழாமல் பிறந்த வீட்டிற்கே வரும் பெண்களும் மாமியாரின் தொல்லை காரணமாகவும் வந்து இருப்பார்கள்.
இங்கும் அதே பிரச்சனை மாமியார் மருமகள் சண்டை ஒரு சாப்பிடும் போது தண்ணீர் வைக்க வில்லை என்ற பெரிய குற்றத்தில் ஆரம்பித்து,
நான்கு மாதமாய் நடந்து கொண்டு இருக்கிறது.இது வரை சுகுமார் காதிற்கு வர வில்லை நேற்று தான் அவனிடம் அவள் மனைவியும் அவள் தாயும் தனி தனியே கூறினார்கள்.
அதை கேட்டு அப்போது ஒன்றும் சொல்லாமல் வேலைக்கு புறப்பட்டு வந்து விட்டான்.ஆனால் இரவு இதற்கு தீர்வு வேண்டும் என எண்ணி இருக்கும் இருவருக்கும் என்ன சொல்வது என்று யோசித்தான்.
இரவு வந்த உடன் அம்மா இருக்கும் அறைக்கு சென்றான்.அம்மாவிடம் சென்று நான்கு மாதமாய் சண்டை என்று சொன்னீர்கள் ஆனால் இது வரை என்னிடம் அதை பற்றி ஒன்றுமே அவள் சொல்ல வில்லை.நேற்றும் அவள் என்னிடம் இதை பற்றி ஒன்னும் சொல் வில்லை.நான் என்ன செய்ய அவளை அழைத்து கேட்கவா என்றான்.
என்ன சண்டை வந்தாலும் தன் மகனிடம் தன்னை பற்றி எதுவும் சொல்ல வில்லை. அவள் மட்டுமா சண்டை போட்டால் நாமும் தான் சண்டை போட்டோம்.நம் மகள் தவறு செய்தால் நாம் மன்னிக்க மாட்டோமா என்று எண்ணியவாறு வேண்டாம் சுகுமார் என்றாள்.சரி அம்மா நீங்கள்
தூங்குங்கள் என்று பின் தன் அறைக்கு வந்தான்.
இன்று அவனை ஒரு கை பார்க்க வேண்டும் என இருக்கும் தன் மனைவியிடம் அருகில் வந்து அமர்ந்து அதே வசனத்தை வரி மாறாமல் ஒப்பித்தான்.
பகல் விடிந்தது.தன் மருமகளுக்கு தேநீர் எடுத்து கொண்டு சுகுமார் தாய் வந்தாள்.அதற்கு முன்னரே எழுந்து மாமியாருக்கு சுடு தண்ணீர் போட்டு குளிக்க தண்ணீர் ரெடி என்று மாமியாரிடம் சொல்ல வந்தாள்.
நடுவுல்ல கொஞ்சம் பக்கத்த காணோம்னு வாழ்ந்தா சந்தோசம் அவரவர் வாழ்க்கையை விட்டு போகாது.

எழுதியவர் : கார்த்திக் (2-Feb-14, 8:02 pm)
பார்வை : 206

மேலே