குடிசையில் கருகும் முதிர் குமரிகள்

தவளையாய் மனம்
கவலையில் தினம்..!
வரம்கள் ரணம்
வயதுகள் பிணம்!

ஜன்னல் கம்பிகள் ...
கன்னிகளின் கூண்டுகள்!
குடிசையில் கருகும்
முதிர் குமரிகள்!

வாய்ப்பு தேடும் வயோதியர்களுக்கு
வாக்கப்பட காத்திருக்கின்றன ...
வயதுகள் முதிர்ந்ததால்
வழுக்கை களும் வாழ்க்கைத்தர வெறுக்கின்றன!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (2-Feb-14, 10:13 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 52

மேலே