என் கவலை
மனதில் உள்ள கவலை சொல்லவேண்டும்,
யாரிடம் சொல்வது....
குணம் கொண்டோர் தேட,
இனம் காணமுடியவில்லை.
உறவு என்போர் இருக்க,
உண்மை இருக்கவில்லை .
நண்பர் உண்டு நாடலாம்,
நம்ப வில்லை என்னையும்.
மனைவியிடம் பேசலாம் ,
மறுக்குது மனசுமே.
பிள்ளைகளிடம் கேட்கலாம் ,
பின் விளைவை நினைக்குதே.
கோவில் சென்று சாமியிடம் உருகலாம் ,
கூட்டம் நிக்க விடாமல் தள்ளுதே.
தாடிச் சாமியாரிடம் தயக்கம் என்ன,
என்றே சென்றேன்
அவர் தயங்கி தயங்கி புலம்புகிறார்
அவர் குறையை .