மௌனத்தின் சப்தங்கள்

மௌனத்தின்
சப்தங்கள்
இனிமை !!!

மனதை அடக்கி
மௌனத்தை கேள்

மௌனம்
நாம் வியக்கும்
ஒரு விந்தை மொழி

கேட்கும் செவிகளுக்கு
மௌனம் பேசும்
மொழியின் சப்தம்
விந்தையாகும்

உணர்வுகளின் ஓம்காரம்
ஒரு மௌனப் பரிமாற்றம்

மனக்கடலின்
கரை மோதும்
நினைவலைகள்
ஒரு மௌனப் போராட்டம்

கண்கள் பேசும்
காதலின் மொழி
ஒரு அழகிய
மௌனத் தடுமாற்றம்

ஆம் ...
மௌனத்தின்
சப்தங்கள்
இனிமை !!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (3-Feb-14, 11:15 pm)
பார்வை : 105

மேலே