பிடித்தது பிடிக்காதது

ஆலயத்து யானைக்கு நாமம் போடுவதில்
தென்கலையா வடகலையா என்று பெரிய
பிரச்சனையை ஆகிவிட்டது . விவகாரம்
கோர்ட்டிற்குப் போய் வழக்கு நடந்தது
கொண்டிருந்தது .
ஆலயத்து யானையின் நெற்றியை இப்படியா
மூளியாக விட்டு வைப்பது ! தீர்ப்பு வரும்வரை
திருநாரை நெற்றியில் பூசி சிவாலயத்திலாவது
நிறுத்தி வைக்ககலாமே என்று அலுத்துக்
கொண்டார் ஒரு சைவப் பெரியவர் .
இதற்கிடையில் ஒரு நாள் யானை கட்டை
அவிழ்த்துக் கொண்டு ஓடிவிட்டது .
ஊர் மக்கள் யானைக்கு மதம் பிடித்து விட்டது
ஓடிவிட்டது என்றார்கள்
யானைக்கு மதம் பிடிக்கவில்லை
ஓடிவிட்டது என்றார் கவிஞர் வாலி .
சுற்றி என்ன நிகழ்கிறது என்று தெரியாமல்
தேர்தல் வரப் போகிறதே யாருக்கு ஓட்டுப்
போடவேண்டும் என்ற கவலையும் இல்லாமல்
உலகை மறந்து ஒரு ஜோடி மர நிழலில்
பேசிக் கொண்டிருந்தது
அவர்களிடம் சென்று ஒருவர் கேட்டார்
"உங்களுக்கு எந்த மதம் பிடிக்கும் ?"
"மதமாவது மண்ணாங்கட்டியாவது "
யானைக்குத்தான் மதம் பிடிக்கும் " என்று
எரிந்து விழுந்தாள் காதலி
பத்திரிகையோ தொலைக் காட்சியோ ..சொல்லறத
அமைதியாக சொல்லேன் என்றான் காதல்
பைய்யன்
"அப்படியா சரி
இந்தப் பாருங்க பத்திரிகை --தொலை அண்ணா
எனக்கு இவனப் பிடிச்சிருக்கு ; இவனுக்கு
என்னப் பிடிச்சிருக்கு
எங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சது
பெற்றோர்களின் சம்மதம் " என்றாள் !
----கவின் சாரலன்