நிலையான சு-தந்திரம்- எப்போது
ஏதிலியாய்ப் இப்பாரினில் வந்துதித்த மனிதன்
அனைத்தையும் நீண்ட பொறிமுதல் பெற்றவனாய்
இப்பாரினில் சங்கரித்துப் போகும் பொருட்களை
வாரிக் கட்டிக் கொள்கிறான்
இப்பைத்தியகாரன் சுதந்திரம் அற்றவனாய்.
அழகு-யாக்கை நிலையாமை உணராதவனாய்
நீண்ட காலம் நிலைபேறு எண்ணி
கிடைக்கவே ஒன்னாத சஞ்சீவியைத் தேடியலைகின்றான்
சிரஞ்சீவியாய் வாழ்க்கை பெற
சுதந்திரம் அற்றவனாய்.
மனிதன் சுயம்பாய் வந்துதித்தவன் போல்
ஈசனின் விசும்பில் ஏறி நின்று
இறைவன் ஆற்றலில் கயமை கொள்கின்றான்
மடமையறியா மனிதன் சுதந்திரம் அற்றவனாய்.
'தான்' எனும் அகந்தை இவனை
விட்டுவைப்பதாக இல்லை
தன்னையே அசகாயசூரன் என
நினைத்துக் கொள்கிறான்
ஆனால் அபாயம் என்றால் மட்டுமே கேதுகிறான்
மறவன் துணைவேண்டி சுதந்திரம் அற்றவனாய.
மூதேவியை வீட்டினுள் அடைத்து வைத்துக் கொண்டு
பட்டிமன்றம் ஒன்றிற்காய் ஒத்திகை பாரக்கிறான்
சுதந்திரம் கிடைத்துவிட்டதா?
சுதந்திரம் கிடைக்கவில்லையா? என
புனித மா(க்கள்) கொண்டு
சுதந்திரக் கோலம் போடாப்படாத
இதுவரை உணர்விழந்த
இன்றைய கோழைகளின் முன்றலில்