கவிதையால் செய்யப்பட்ட காந்தங்கள்

நேராக நீ பார்த்தால்
நெஞ்சு துளைக்கும் மலர்க் கணைகள்...முகம்
திருப்பிய படி பார்த்தாலோ
திரண்ட எழில் மலர்க் குவியல்.....!!

போட்ட சடை முன்புறமாய்
புரளட்டும் விட்டு விடு - உன்
பூரித்த கன்னம் ரெண்டில் எனை
புதுக் கவிதை எழுத விட்டு விடு.....!!

தென்றே புயலின் வேகம்
தெரிந்தே நீ தொட்டு விடு....எனைத்
தெரியாமல் நான் தேட கொஞ்சம்
தேனருவியாய் நீ மாறிவிடு....!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (4-Feb-14, 2:23 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 64

மேலே