சாலையோரம்

அது ஒரு பனிப் பிரதேசம், குளிர்ந்த காற்று குறுகுறுவென்று உரசியது உடலெங்கும், வெள்ளை பனிகட்டிகளில் நடக்கும்போது நிலவில் நடந்தால் ஒருவேளை இப்படிதான் இருக்குமோ என்று எண்ணுகிற வேளையிலே ஓடி வந்தாள் என் விமான பணிப்பெண் ஐயா விமானம் தயாராக உள்ளது. தங்கள் வருகைக்காக அனைத்து நாடுகள் சபை காத்திருக்கிறது என்றாள். சரி, தேனீர் கொடு பருகிவிட்டு செல்லலாம் என்றேன். வாங்கி அருந்தும்போதுதான் அந்த சுகம் தெரிந்தது. அதிகபட்ச குளிர்காற்றில், இதமான தேனீரின் மிதமான இளஞ்சூடு இறங்கிது என் தொண்டைக்குள்ளே. தே கயித மணி 4 ஆச்சு பேப்பர் போட போ. நல்ல கனவ கெடுத்திட்டியேம்மா. போடா டேய், பிளாட்பாரத்துல தூங்குற நாயி கனவாம் கனவு போடா.

எழுதியவர் : வென்றான் (4-Feb-14, 10:56 pm)
சேர்த்தது : வாகை வென்றான்
Tanglish : saalaiyoram
பார்வை : 147

சிறந்த கவிதைகள்

மேலே