இயற்கை தந்த இனிய விருந்து
விரியாத ஆகாயத் தாமரைகள்
விரைந்து நீந்தும் என் ரசனை மீன்
விரும்பித் திங்க பச்சைப் பீடாக்கள்.....!
அது சரி தேங்காய்ப் பூ திருவல்கள்
என்ன ஆயிற்று எனத் தேடினேன்......
வானவில்லை பொடி செய்து
வண்ணமாக அதில் தூவிக் கொண்டேன்...
ஜீரணிக்கத் தொடங்கியது....
ஜிவ்வென்றே
இயற்கைச் எனக்குத் தந்த
இனிய விருந்து