தெரிஞ்சவர் சொல்லுங்க

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்
தெரிஞ்சவர் சொல்லுங்க
படித்தவர் எழுதுங்க

முன் பக்கம்
பின் பக்கம்
உண்டு
அகப்பக்கம்
வந்தது
அதிலயே
இளைஞர் கூட்டம்
முண்டுது
அது ஏன் ?

கஞ்சி வைச்ச
கரை வேஷ்டியும்
தூய வெள்ளைச் சட்டையும்
கட்சி காரர்களிடம் மட்டுமே
அது எப்படி?

செய் கூலி
சேதாரம் இல்லை
பவுனுக்கும்
இருபது ரூபாய்
குறைவு என்று
வியாபாரம் நடக்குதே
எப்படி ? எப்படி ?

விளம்பரத்தில் வரும்
ஆணும் பெண்ணும்
எப்போதும்
அழகாய் ,நிறமாய்
இருக்கிறார்களே
அதுவும் எப்படி?

தமிழ் சினிமால்
கதாநாயகனை
வில்லன்கள்
நூறு அடி அடித்தாலும்
சாவதில்லை
கதாநாயகன்
அடித்த சில அடியில்
வில்லன் படுத்து விடுகிறான்
அது எப்படி ? எப்படி?

எழுதியவர் : arsm1952 (5-Feb-14, 4:46 pm)
பார்வை : 1049

மேலே