பச்சைத் துரோகி
நான் தனியாக தான் கடந்த மூன்று நாட்களாய் இருக்கிறேன். வீட்டின் பின் பக்க கதவைத் திறந்து விட்டிருக்கின்றேன். கடும் மழை வெளியில். திறந்திருந்த வாசலில் தலைவிரி ஜடமாய் நான். மழையின் சாரல்கள் என்னை மொத்தமாய் நனைக்கின்றன. முழுவதுமாய் நனைந்து தொப்பையாய் இருக்கின்றேன்.
கதறுகிறேன் தொண்டைக் கிழியும் வரை. மழையின் வேகத்திற்கு ஈடுக் கொடுக்க முடியவில்லை. இருந்தும் கதறுகிறேன் உன் பெயர் சொல்லி. மழைக்கும் கதறும் என்னிலைக் கண்டு மனம் கொதிக்கிறது போல. இன்னும் வேகமாய் பேயத் தொடங்கியது பலத்த காற்றுடன்.
இதுதான் காதலின் வலியா ? காதலில் தோல்வி என்றால் இப்படிதான் இதயம் கனத்து உயிர் போவதுப் போல வலிக்குமா ? ஐயோ ! இந்த முட்டாளுக்கு இது விளங்கவில்லையே. ஏன் என் நெஞ்சம் இப்படி வெடிப்பதுப் போல் இருக்கிறது. கூர் முனைக் கத்தி ஒன்றினை எடுத்து சரியாகக் குறிப் பார்த்து என் இதயத்தின் மையப் பகுதில் குத்துவதுப் போல் அல்லவா இருக்கிறது. அதுவும் மிகவும் வேக வேகமாய் ஆத்திரத்தோடும் ஆவேசத்தோடும் மீண்டும் மீண்டும் குத்துவதுப் போல் இருக்கிறது.
ஆண்டவா ! என்னால் வலித் தாங்க முடியவில்லையே ! இப்போதே இந்த உயிர் போய் விடாதா. வாசலில் வலித் தாங்காமல் அங்கேயே தலையில் அடித்துக் கொண்டு கதறுகிறேன். அங்கிருந்து அழுதுப் புரண்டு வாசலுக்குக் கிழ் இறங்கி சிமெண்டுத் தரையில் முட்டிக் கொள்கிறேன். மழையின் துளிகள் ஒவ்வொன்றும் சுருக் சுருக் கென்று மேனியில் பட்டுத் தெரிகின்றன. இதுவெல்லாம் ஒரு வலியா ?! என் இதயம் இப்போது பட்டுக் கொண்டிருக்கும் வலியை விட இது என்ன பெரிய வலியா ?
நான் உனக்காய் கத்தியில் அறுத்துக் கொண்ட என் வலதுக் கை மணிக்கட்டை இப்போது பார்க்கின்றேன். காயம் இன்னும் ஆறவில்லை. மழையில் நனைந்து கை வினு வினு என்கிறது. சற்று நேரத்துக்கு முன்புத் தான் உன் வீட்டு அஞ்சாடியில் நாயைப் போல காத்திருந்தேன். கல் நெஞ்சுக்காரனான நீ என்னைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை. உன்னை நினைக்க நினைக்க நெஞ்சம் குமறுகிறது. உனக்காய் என் நெஞ்சில் குத்திக் கொண்ட உன் பெயர் கொண்ட பச்சை இப்போது நெருப்பாய் என் நெஞ்சை எரிக்கிறது. என் விரல் நகங்களால் பச்சைக் குத்திய இடத்தைக் கீறுகிறேன். கீறல்களிலிருந்து ரத்தம் வருகிறது.அதுவும் மழையில் காணாமல் போகிறது.
என் மனம் அதிகமாய் வலிக்கிறது. உன் நினைவுகள் என் மூளையில் ஆணி அடித்து விட்டதுப் போல கொஞ்சமும் நகராமல் அங்கேயே சுழன்றுக் கொண்டு இருக்கிறது. போய்த் தொலைந்தால் தான் என்ன ?! இன்னும் மண்டையில் இருந்து என்னச் செய்துக் கிழிக்கப் போகிறது உந்தன் பாழாய்ப் போன நினைவுகள்.
இன்றோடு நீ என்னைப் பிரிந்து மூன்று நாட்கள் ஆகின்றன. என்னைத் தயவு செய்து நம்பு. நான் உன்னை ஏமாற்றவில்லை. கனவிலும் இன்னொருவனை நினைக்காதவள் என்று நான் கெஞ்சியும் கால்களால் என்னை உன் மாமன் எத்தித் தள்ளியப் போதும் உன் புதுக் காதலியோடு உல்லாசமாய் ஊர் சுற்ற கிளம்பிய உன் பாதங்களைப் பிடித்துக் கொண்டு நீ நடக்கும் வேளையில் சாலையில் தர தர வென இழுப்பட்டும்; மற்றவர் முன்னிலையில் அசிங்கப்பட்டும் இந்த மானங் கெட்ட மனம் ஏன் தான் உன்னையே நித்தமும் எண்ணி ஏங்குகிறது என்று எனக்குப் புரியவே இல்லை.
இதைத்தான் உண்மையான காதல் என்பார்களா ? அது இப்படித் தான் இருக்குமா ? உண்மை காதல் என்றால் திகட்டாத தேன் போல் இன்பத்தை அல்லவா அள்ளித் தர வேண்டும். இது உயிரை மாய்க்கும் வலியையும் இதயம் தாங்க முடியாத ரணமான வேதனைகளையும் காயங்களையும் அல்லவா தருகிறது. உயிர் ஆத்மாவை உயிருல்ல ஒர் உடலிலிருந்து மனசாட்சியே இன்றி பிரித்தேடுப்பதுதான் காதலின் உச்சக் கட்டமா ?
விங்கவில்லையே மடச்சியான எனக்கு !
இப்போது என் கைகளில் பிடித்திருக்கிறேன் ஊசி. அதில் நிறைத்திருக்கிறேன் ஐஸ்.இப்போது இந்தக் கொட்டும் மழையில் என் இடதுக் கையை நீட்டி ஊசியை மெல்லமாய் என் மணிக்கட்டையில் குத்துகிறேன். அதன் போதை கொஞ்சங் கொஞ்சமாய் தலைக் கேருகிறது. தலை லேசாய் பாரமாய் ஆகிறது. கண்கள் மயக்கத்தில் சொருகுகின்றன. கண்களின் பார்வை மங்கலாகி ஒவ்வொரு மழைத் துளியும் இரண்டு இரண்டாய் தெரிய ஆரம்பிக்கின்றன. இப்படி செய்வது இதுவே இரண்டாவது முறை. பழக்கமாகி விட்டால் மயக்கமோ தயக்கமோ இருக்காது.
சீ.... கெட்டவனே ! உனக்காக..... உனக்காக அல்ல உன் நினைவுகளின் அட்டகாசம் என் மனதிலும் மண்டையிலும் சொல்லச் சொல்லச் கேட்காமல் கொட்டமடிக்கின்றனவே அதற்காக என்னை இப்படி செய்ய வைத்து விட்டாயே.
நான் எல்லா சொந்த பந்தங்களையும் விட்டு வந்தது உன் ஒருவனுக்காகத்தானே. நீ இருக்கிறாய் என்ற நம்பிக்கையில் தானே. அயோக்கிய துரோகி ! சிரித்து சிரித்துப் பேசி நம்ப வைத்துக் கழுத்தறுத்தப் பாவியே ! உன்னால் என்னிலைப் பார் ! தன்னிலை மறந்து இன்னும் கொஞ்ச நாளில் பைத்தியம் பிடித்து சட்டைகளைக் கிழித்துக் கொண்டு கையேந்தி சாலையில் பிச்சை எடுத்து அலையப் போகிறேன் ! அப்படிப் பட்ட கேவலமான நிலையில் பார்க்கத்தானே என்னை ஆசைப்பட்டாய். நிச்சயம் பார்ப்பாய் ! ஏனென்றால் அதுதானே உன் லட்சியம் !
அதற்காய்த்தானே சுகந்திரமாய் சுற்றித் திரிந்த என்னைக் கழுகாய் வட்டமிட்டு காதல் என்ற வலையில் விழ வைத்து உன் வட்டத்துக்குள் இழுத்துக் கொண்டாய். நான் செய்த பாவம் தான் என்ன ? உன்னை நம்பி காதல் செய்ததுதான் தவறா ? அல்லது உன்னை நம்பியதுதான் தவறா ?
ஐயோ ! அறிவில்லா மனமே ! அவனை மறந்துவிடு. அவன் நினைவுகளை அழித்துவிடு. அவனை வெறுத்து ஒதுக்கு. கேட்டிருந்தால் என் உயிரைக் கூட தந்து இருப்பேன் உனக்காக. உன் கைகளால் விஷத்தைத் தந்திருந்தால் கூட குடித்து உன் காலடியிலே சரிந்து மடிந்திருப்பேன். ஆனால், நீ ! பிரிவு என்ற ஒருக் கொடுமையான விஷத்தைக் காலம் முழுதும் உடலில் கொட்டி விட்டு போய் விட்டாயே.
உன் ஞாபகங்களால் என்னை நானே பல முறை சிகரெட்டால் சுட்டுக் கொண்டேன். ஒவ்வொரு இரவும் நீயின்றி இருக்க முடியாத அளவு உன்னுடனே ஒன்றிப் போய் விட்ட என்னை, இன்று இப்படி தனிமைச் சிறையில் அடைத்து கொடுமைப் படுத்துகிறாயே உனக்கெல்லாம் நல்ல சாவே வராது !
ரோக்கக்கடித்து,மருந்தடித்து என்னை நானே காயப்படுத்திக் கொண்டதெல்லாம் இன்றோடு போதும். இதற்கெல்லாம் முற்றுப் புள்ளியாய்த்தான் இன்று, இப்போது இந்த கொட்டும் மழையில் இவ்வளவு நேரம் சுடு சூரனை ஏதுமின்றி அமர்ந்திருக்கின்றேன். என் அன்பை துச்சமாய் நினைத்து தூக்கி எறிந்துப் போன உனக்காய் ஏனடா நான் அழ வேண்டும் மடையா !
ஏமாற்றுக்காரன் உனக்கே ஒருக் காதலி கிடைக்கும் போது ஒருவனுக்காகவே உண்மையாய் வாழ்ந்து இன்று மொத்தமாய் முகத்தில் உன்னால் சேற்றடிக்கப்பட்டு, ஒரு பெண் என்ற மரியாதையையும் இழந்து ; காதல் என்ற பூச்சிக் கொல்லி மருந்தை வாயில் கொட்டி உடலில் உள் வாங்கிக் கொண்டு நடைப்பிணமாய் வாழப் பழகிக் கொள்ளப் போகும் இந்த ருத்ராவின் சத்தியமடா இது !
இப்போது மழையும் நின்று நல்ல கொளுத்தும் வெயிலில் என் ஈர தேகத்தைக் காய வைத்துக் கொண்டிருக்கிறது.