காதலென்னும் சோலையினில்50
அந்த அதிகாரியின் வீட்டிற்குள் 3பேரும் நுழைந்தனர்.
வாடா ரமேஷ்! எப்படி இருக்க? என்று ராஜாவின் நண்பனை தோள் தட்டி வரவேற்றார் அந்த போலிஸ் அதிகாரி........
அவரைப்பார்த்ததும் ராஜாவிற்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது எப்படியாவது ராஜலெக்ஷ்மியை கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கை பிறந்தது! ஏனென்றால்; அந்த அதிகாரி பார்க்க அவ்வளவு வீரமாக பேச்சிலும் நானயமுள்ளவனாக தோற்றமளித்தார்...........
இவர்கள் டென்சனில் இருப்பது அவருக்கு புரியவே முதலில் உட்காருங்க அமைதியா பேசலாம்! என்று ஆறுதல்படுத்தினார்.
(3பேரும் உட்கார்ந்தனர். ....)
சரி! இப்போது சொல்லுங்க என்ன விஷயம் என்று விசாரித்தார்?
ராஜாவைக்காட்டி"இவனுடைய திருமணத்திற்காக நாங்களும் இவனுடைய குடும்பமும் முருகர் கோவிலுக்கு சென்றிருந்தோம், திருமணத்தை முடித்துவிட்டு திரும்ப வரும் போது இவனுடைய தங்கையையும் குழந்தையையும் திடீரென்று காணவில்லை தேடி பார்க்கும் போது குழந்தை கிடைத்தது தங்கையை காணவில்லை" என்று ரமேஷ் சொல்லி முடித்தான்...................
அனைத்தையும் தெளிவாய் கேட்டுக்கொண்டிருந்த அந்த அதிகாரி சரி இந்த விஷயம் என்னிக்கு நடந்தது என்று விசாரித்தார்????
இப்போது தான் 1மணிநேரம் தான் ஆகும் உடனே உன்னை தான் பார்க்க வந்தோம் நீதான் உதவி செய்யணும் என்று கெஞ்சினான் ரமேஷ்.
ராஜாவும் "அவள் என் உயிர் என் வீட்டு மகாலெக்ஷ்மி sir எப்டியாவது எங்களுக்கு இந்த ஒரு உதவியையும் செய்யுங்கள்" நான் என்ன வேணும்னாலும் செய்றேன் sir என்று அவரது காலில் விழுந்தான்.......
ஐயோ! என்ன sir இது என்காலில் போய் விழுந்துட்டு!!!!!!!
நான் கேட்குறதுக்கேல்லாம் சரியா மறைக்காம பதில் சொல்லுங்க சீக்கிரமா கண்டுபிடிச்சிரலாம் ஒன்னும் கவலை படாதீங்க என்று கூறினார் அந்த அதிகாரி..............
ம்.. சரி sir என்று பதிலளித்தான் ராஜா!
குழந்தைக்கிட்ட விசாரிச்சீங்களா? என்று கேட்க!
ஆமா! sir ஆனால் அவன் சிறு குழந்தை சரியாக பதிலளிக்கும் பக்குவம் இல்லை என்றான்..
கேட்குறேன்னு தப்பா நினைக்காதீங்க உங்க தங்கச்சி யாரையாது love பண்றாங்களா? இல்லை யாராவது பசங்க கிண்டலோ? love அந்த மாதிரி ஏதாவது பிரச்சனைகள் வந்திருக்குதா? மறைக்காமல் சொல்லுங்கள் என்று கேட்டார் ...........
அப்படி எந்த பிரச்சனைகளும் இல்லை சார். அவள் ரொம்ப நல்லவள் என்று சொல்ல....
சரிஉங்க குடும்பத்தில் யாருக்காவது உங்கள் மேல் கோவமோ, இல்லை சண்டையோ உண்டா? உங்கள் தங்கச்சிய கடத்துற அளவுக்கு பிரச்சனைகள் இருக்கா? என விசாரித்தார்???
இல்லை சார், ஆனால் என் அத்தை பொண்ணுக்கும் என் தங்கச்சிக்கும் ஒரு சின்ன தகராறு உண்டு வேறு யாரிடமும் பிரச்சனைகள் இல்லை என்று ராஜா பதிலளித்தான்.
அவங்க 2 பேருக்கும் எதற்காக தகராறு கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா?
நான் love marriage பண்ணிக்கிட்டேன் என் காதலை முதலில் என் வீட்டிலும் கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் சம்மதித்தார்கள் ஏனென்றால் அவர்கள் என் அத்தை பொண்ணை எனக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்தனர்.................
ஆனால் நான் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் என் அத்தை பொண்ணுக்கு என் மனைவி மீது கோவம் அவளை எப்போதும் கேவலமாக பேசிக்கொண்டிருப்பாள் இதை என் தங்கை தட்டிக்கேட்டு அவளை அசிங்கமாக பேசியிருக்கிறாள் அதன் பிறகு இருவரும் பேசிக்கொள்வதில்லை..........
இந்த விஷயத்தை தவிர வேறு யார் கூடயும் பிரச்சனைகள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை சார் என்று ராஜா சொல்லி முடித்தான்............
சரி! நீங்கள் வீட்டுக்கு போய் ஏதாவது தகவல் கிடைத்ததா என்று கேளுங்கள் இல்லை என்றால் நாம் சாயங்காலம் கிளம்பி உங்கள் அத்தை வீட்டில் விசாரித்து பார்க்கலாம் இல்லை என்றால் பணத்திற்காகவோ? நகைக்காகவோ? யாராவது இப்படி பண்ணியிருக்கலாம்.
எதுனாலும் கண்டு பிடித்துவிடலாம் தைரியமாக செல்லுங்கள் என்று அனுப்பி வைத்தார் அந்த போலிஸ் அதிகாரி!!!!!!!!!!!!
தொடரும். ............