சந்தோஷ சித்ரவதை

உன் உச்சிதனை முகர்ந்தால்
என் உடம்பெல்லாம் சிலிர்க்குதடி !
கவிச்சை வாடையும் சுகம்தான்
உன்னை கட்டி அணைக்கையில்!
இனி பேச்சுக்கே இடமில்லை
எனப் பார்த்தால்,
சர்ச்சை விளையாட்டுக்கு மத்தியில்
கொச்சை வார்த்தைகளை
உளறுகின்றோம்,
உணர்ச்சி கடலின்
உச்சத்தில் நீந்துகின்றோம்
நம்மையும் மறந்து !
இச்சை எல்லாம் தீர்ந்த பின்னும்
சொச்சம் கொஞ்சம் இருக்குதடி !
மிச்சம் மீண்டும் அழைக்குதடி !
இச்சென இதழ் பதித்தால்
இந்த இரவு நீளுமடி
விடியல் விலகி செல்லுமடி
இப்போது .
பதிக்கவா ? அல்லது படுக்கவா ?
இதழ் பதிக்கவா? அல்லது இமைமூடி படுக்கவா ?
ஒரு நாளில் முடியாதடி இந்த
சந்தோஷ சித்ரவதை
ஒவ்வொரு நாளும் தொடரும் !!!!!

-----------------அருணன் கண்ணன் ---------

எழுதியவர் : அருணன் கண்ணன் (6-Feb-14, 10:43 am)
சேர்த்தது : அருணன் கண்ணன்
பார்வை : 138

மேலே