அடிபெண்ணே காதல் சொல்ல

சின்ன சின்ன தூரல்கள்
அவளின் கொஞ்சும் பார்வைகள்
சிறகடிக்கும் மனசு பேச
தேடும் சில வார்த்தைகள் ...............
கவிதை படிக்க தூண்டிடும்
உன் அழகு மொத்த குவியல்கள்
முழுதாய் ரசிக்க துடித்திடும்
என் மனதின் தவிப்புகள்
வெறும் வார்த்தையால் சொல்ல முடியும்
பொய்யல்ல என் வர்ணனை
அடிபெண்ணே உன் காதல் சொல்ல
என்ன என்ன நிபந்தனை ...........
வரிசை கட்டி நிற்கும் ஆசை
வரிகள் போட சாத்தியம்
கவிதை பாட உன்னை மட்டும்
எதற்கு எனக்கு வாத்தியம் ...............