நெடுஞ்சாலை எழுதும் கதை

கிறுக்கு மொவ ஒருத்தி வழி
குறுக்கு வர கண்டு...ஏ....
சிறுக்கியே!
யன் கனரகம்,
இனி ரணமோ!
நெடுஞ்சால
குறுகாதோ!

இந்த பூ முட்டி
எந்தன் வேர் வெட்டி
இறக்க கண்டன் உடன்
பிறக்க கண்டன்
ஒரு ஆயிரம்
சிறு தூவியால்
இறக்க கொண்டன் உடல்
பறக்க கண்டன்

நிழலாட்ட
பாவயா பாவிதான்
கயிறில்லாதே கட்டுபட்டேனே
பாவமா பாவிநான்
உசுரில்லாதே சுத்திவந்தேனே

காதலே காதலே

வழியல்லான் வயவெளி
தொனயன கிளி
உயிரேந்தி நடபோட
இந்த பூ வினை
திருப்புமுனை.
எனக்கேத்த எச்சம்
கைகோத்தா மிச்சம்
இந்த பூவினை,
இரு பூமுனை
மெருகேத்த, மெச்சும்
விழி பாத்தே மொச்சும்

சேல மேல
சாயவே சாரலே
விரல் போதாம போகுமோ வீனே
சாயவே சாரலே
நிழல் மோதாம போகலாமே
சாயவே சாரலே

நீ வந்ததுன் வால் வந்தது
வான் விட்டு வான் தாவ தான் வந்தது
நீ வந்ததுன் வாள் வந்தது
போர்க்கால பூந்தூரல் ஏன் தந்தது
அத்தி மரத்துல பூ ஏதும் பூக்காதம்மா
கொட்டி கொடுத்தாலும் தேன் சொட்டும் ஏற்காதம்மா
நீ வந்ததுன் தான் வந்தது
பூக்காத பூ இன்று தேன் சிந்துது

எழுதியவர் : ராஜராஜன் (6-Feb-14, 10:01 pm)
சேர்த்தது : Radja Radjane
பார்வை : 87

மேலே