பெண்ணியம் பேசுவதற்கு மட்டும் அல்ல
பெண்களை பூக்களாய் வளர்க்காதீர்கள்
இது நந்தவன தோட்டமல்ல
மனித மிருகங்களின் காடு
புடவை கட்ட மட்டும் கற்றுத்தராதீர்கள்
கண்களால் துகிலுரிக்கும் துரியோதனர்களின்
கண்களைக் கட்டவும் கற்றுத்தாருங்கள்
அடுப்பறை கூண்டிலிருந்து
பறக்க நினைக்கும்
சிறகுகள் பொசுக்கப்படலாம்
எத்தனை முறை தீயிலிட்டாலும்
உயிர் பெற்று வரும்
பீனிக்ஸ் பறவையாய் இரு
ஒரு பெண்ணாய் மட்டுமே
உன்னை தோற்கடிக்க நினைப்பவர்கள்
வென்றுவிடக்கூடாது