கோட்பாடு

தோளோடு தோளாகத்
துணையாக இருந்தவர்கள்
மாளாத பகையாகி
வாளெடுத்து மோதுவதும்

நேற்றுவரை தூற்றுவதும்
இன்றிங்கு போற்றுவதும்
என்றென்றும் அரசியலில்
நிலைத்திருக்கும் கோட்பாடு!

எழுதியவர் : (7-Feb-14, 3:01 pm)
பார்வை : 57

மேலே