அம்மா

அனைத்துயிரின் அடிப்படை பந்தம்

அவள் ஒரு ஆலயம்

அன்பென்பதின் பள்ளிக்கூடம்

அரவணைப்பின் அலை கடல்

அழகின் அருள் வடிவம்

அமைதியின் இலக்கணம்

அகிம்சையின் ஆணிவேர்

அமிர்தத்தின் தனிச் சுவை

அவள் மொழிகள்

அகல் விளக்கிற்கும் தூண்டுகோல்

அவள் அறிவுரைகள்

அக்னி பிளம்பையும் ஆறவிடும்

அவள் வார்த்தைகள்

ஆத்திரத்தையும்

ஆகம வேதங்களாய் ஓதும்

அவள் அன்பு மொழிகள்

அவளால் கிடைத்த இந்த

அரிய வாழ்வு

அவளுக்கே அர்ப்பணம்!

அவளால் கிடைத்த இந்த

அரிய வெற்றி வாழ்க்கை - என்றும்

அவள் பொற்பாதங்களில்

சமர்ப்பணம்!

எழுதியவர் : ananthika (7-Feb-14, 3:32 pm)
Tanglish : amma
பார்வை : 103

மேலே