சுமையாய் பிறந்தேனோ

சுழலும் இந்த உலகில்
சுமையாய் பிறந்தேனோ என்தாயே!
பத்துமாதம் கருவறையில் சுமந்தாய்
பட்டென்று இப்படிவீதியில் விட்டெறியவா?
பாவம்என்ன செய்தேனோ அறியேன்!
பாதிவயிறு உணவுக்குக்கூட வழியில்லை!
மழையில் விளையாடும் மழலைகள்மத்தியில்
மரத்தடியில் ஒதுங்கி நிற்கிறேன்!
உடை நனைந்து விட்டால் !
உடுத்திக்கொள்ள வேறுஆடை இல்லாததால் !
சன்னலோரம் எட்டிப் பார்க்கிறேன் !
சகதோழர்கள் கல்வி பயில்வதை !
இரவில் கிடக்கின்றேன் தெருஓரத்தில்
இமைமூடி உறங்க இடமில்லாததால் !
என்னுயிர் அன்புத் தாயே !
என்மேல் நீ கொண்ட பாசம்இதுவோ?
படைப்பு.....
நா.அன்பரசன்..

எழுதியவர் : நா.அன்பரசன் .. (7-Feb-14, 4:42 pm)
சேர்த்தது : anbuarun
பார்வை : 82

மேலே