காதிலே பூ

காதிலே பூ வைக்கிறான்
சுற்றி சுற்றி வளமும் இடமுமாக
பலவாகச் சுற்றுகிறான்
பல முறை சுற்றுகிறான்
காது கிழியும் வரை

சுற்றுபவன் சுற்றுவான்
பொய்யை அழகாக
சுருட்டி பந்தாக
கேட்பவனுக்கு இனிமையாக
புனைவான் பொய்யை .


இல்லாததை சுழுட்டுவான்
இருப்பதை மறைப்பான்
சுண்டி இழுப்பான் கவர்ச்சியாக
பொய் பேச்சாலே
பந்தாடுவான் நன்றாகவே.


அவன் தனியன் அல்ல
அவனுடன் பல் பேர்
சுற்றுகிறார்கள் அங்கும்
இங்கும் சழன்று கொண்டே
வைக்கிறார்கள் பந்தமாகவே
பூ காதிலே..

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (7-Feb-14, 3:20 pm)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 548

மேலே