கல்லணைக்கோர் பயணம்27

கல்லணைக்கோர் பயணம்..27
(இடையாற்றுமங்கலதிலிருந்து..1990களில் )

திருவிழாவிற்கு ஒருவாரம்
முன்பே கொடிஎற்ற
அணையாத ஜோதியை
அனைத்துமதம் கலந்த
இருபது பேர்கொண்டக்குழு
வெவ்வேறு ஊர்களிலிருந்து
சுமந்து வருவர்
வருடா வருடம்
ஊரின் பெருமையை
உலகிற்கு உணர்தியவாரே,
அவர்கள் பயணம்
துவங்கியது முதல்
கடக்கும் ஒவ்வொரு
ஊரை பற்றியும்
தகவல் வெளியாகும்
கோவில் ஒலிபெருக்கியில்
தங்கப்பா சித்தப்பா
வழிநடத்திச்செல்ல
பெரிய அணியே
திரளும் அவர்பின்னே
மிதிவண்டி பழகியவருக்கே
முன்னுரிமை வழங்கப்படும்

அடிப்படை தகுதியை
ஆர்வத்துடன் வளர்ப்போம்
மிதிவண்டி பழகி
ஜோதி ஓட்டம்
இலால்குடி வந்தாலே
குதூகலம் பொங்கும்
இடையாற்று மங்கலமெங்கும்,
நான்குமைல் தொலைவை
ஓடியும் நடந்தும்
தீராத வேட்கையுடன்
அவர்களை காண்போம்
பலநாட்கள் பிரிந்தவர்கள்போல்
அவர்கள் கைபிடித்து
கதை பேசுவோம்
எங்களின் இளம்பருவ
கதாநாயகர்கள் அவர்கள்
ஆளுக்கொருவர் கையை
கெட்டியாக பிடித்துக்கொள்வோம்
விழா முடியும்வரை..

அவர்கள் வந்த
மிதிவண்டியை ஆசையாய்
ஓட்டிப் பார்ப்போம்
ஓசூர் , முட்டம்
ஓரியூர் , வேளாங்கண்ணிப்போன்ற
பலஊர்களின் புனிதமண்ணை
தொட்ட பெருமை
அம்மிதிவண்டிக்கு உண்டு
ஒருமுறைக்கு பலமுறை
அழுத்திப் பார்த்து
அடுத்தவருடம் தேர்வாக
வேண்டுமென வேண்டிக்கொள்வோம்
அணையா ஜோதியை
திருவிழா முடியும்வரை
அணையாமல் காப்போம்
எண்ணை உண்டநூலை
இரையாக தந்து

ஜோதியோட்டம் மெல்ல
பயணிக்கும் இலால்குடியிலிருந்து,
தண்ணீர்பந்தல் தொட்டதும்
மேளதாளம் முழங்கும்
ஊர்பெரியவர்கள் எல்லோருக்கும்
பொன்னாடை போர்த்தி
தடல்புடலான வரவேற்புடன்
கூட்டிவர மகளிரும்
தன்பங்கை செம்மைபடுத்த
வரும் வழியெங்கும்
நீர்தெளித்து வண்ணகோலமிட்டு
வீடுதவறாமல் ஆரத்திக்கரைத்து
கோலாகல வரவேற்பளிப்பர்
மாமன் மைத்துனர்கள்
புத்தாடை போர்த்தி
பெருமை படுத்துவர்
களைப்பாய் பயணித்தவர்களுக்கு
வீடுதோறும் கலரும்
பழரசமும் பருகதருவர்
அவர்கள் கையை
இறுகபற்றிய எங்களுக்கும்
வயிறு நிறையும்
அவர்கள் தயவால்..

( பயணிப்போம்..27)

எழுதியவர் : ஆரோக்யா (8-Feb-14, 10:18 am)
பார்வை : 89

மேலே