உளறல்கள்
உள்ளத்தில் கள்ளம் வைத்தான்...
உடல் முழுதும் துன்பம் வைத்தான்!
இரண்டிரண்டாய் எல்லாம் வைத்து-
இரு தொடைக்குள் இன்பம் வைத்தான்!
கண்ணுக்குள் கனவை வைத்தான்...
கடலுக்குள் முத்தை வைத்தான்!
நான் தேடி எடுப்பதற்குள்-
நரைப் பருவம் அடையச் செய்தான்!
எத்தனையோ உலகில் வைத்தான்...
எல்லோர்க்கும் ஆசை வைத்தான்!
எங்கெங்கோ சுற்றி வந்தேன்-
எனக்கென்று என்ன வைத்தான்!
பூவுக்குள் தேனை வைத்தான்...
புன்னகைக்குள் தேளை வைத்தான்!
எதற்குள்ளே என்ன வைத்தான்?
....என்னையவன் உளற வைத்தான்!