என் டைரி!

ஓவ்வொரு
வருடமும்
தவறாமல்
வாங்கி விடுவேன்
நாள்
குறிப்பேட்டை!
வாழ்வை
எழுத
எண்ணி........எண்ணி
ஒவ்வொரு
நாளாக
ஓடியே
போய்விட்டது!
வருட முடிவில்
பிரச்சனை கிளம்பும்

அம்மா.......:
கோலம் போட
வச்சுக்கட்டுமா?

அப்பா.........:
குடும்ப பட்ஜெட்
எழுத வேணும்பா!

தம்பி...........:
வீட்டுப்பாடம்
எழுதி குறிச்சிவைக்க
வேணும் அண்ணா !

தங்கை.......:
ஸ்டாம்ப் ஒட்டிவைக்க
ஆசையா
இருக்கு அண்ணா !

என் தவிப்பு யாருக்கு புரியும்?
எழுதப்படாத என் வாழ்வில்
வெற்றிச்சரித்திரத்தை
நினைவூட்டி
கொள்ள!

எழுதியவர் : இன்பா கவிதைபிரியன் (11-Feb-11, 2:55 pm)
சேர்த்தது : kavithaipriyan
பார்வை : 481

மேலே