கல்லூரி கனவுகள்

வண்ணவண்ண
சுடிதார்
அசைந்தாடி
நடக்கும்
ஆங்கிலத்தில்
கிசு கிசுக்கும்
இடம் தேடி
திரிவார்
ஆங்காங்கே
இருபலார்
கலந்து பேசி
சிரிப்பார்
உணவகத்தில்
தேநீர்
சூடு பறக்கும்
வாகனங்கள்
மாறி மாறி
வந்து நிற்கும்
இலங்கை
தமிழனுக்காக
போராடி ஸ்டிரைக்
புதியபடத்திற்கு
டோக்கன் வாங்க
அரியர்ஸ்
இல்லாதவன்
அரைமனிதன்
அழகை ரசி
அடையவிரும்பதே!
சீனியர் விட்டுச் சென்ற
கல்லூரி பொன்மொழிகள்
சுதந்திரத்தில்
தொடங்கும்
முதலாண்டு
பாட்டு,ஆட்டம்,
மோதல் நடைபோடும்
இரண்டாமாண்டு
காசும்,
கவலையுமாய்
கரைந்துவிடும்
மூன்றாமாண்டு

எழுதியவர் : இன்பா கவிதைபிரியன் (11-Feb-11, 1:55 pm)
சேர்த்தது : kavithaipriyan
பார்வை : 734

மேலே