ஒரு முறை நினைப்பாயா

என்னை நேசித்த இதயமே
நீ இப்போது என்னிடம் பேசவும் யோசிக்கிறாய்
நான் பேசினாலும் நீ பேசாமலே மவுனமாக
என்னை கடந்து நடந்து போகிறாய்

நான் உன் பின்னே வருவதை அறிந்தும் தெரிந்தும் தெரியாமல் போகிறாய்

நானும் புரியாமல் தவிக்கிறேன் என்னை
உனக்கு பிடிக்காத காரணத்தை யோசிக்கிறேன் கரணம் ஒன்றும் காணவில்லை
என் கண்களின் ஈரம் காயவில்லை

நினைப்பாயா உன் மனதில் என்னை
நான் கண்மூடிய பிறகாவது

எழுதியவர் : ரவி.சு (9-Feb-14, 7:07 pm)
பார்வை : 466

மேலே