கதிரவக் காதல்

சுட்டெரிக்கும் சூரியனுக்கு
ஏதோ காதல் தோல்வியாம்
அதுதான்
பூமிப் பெண்ணை
பார்வையால் பொசுக்குகிறான்
மின்னலிலே நாருரித்து
நட்சத்திர பூப்பறித்து
நிலவுத் தட்டில் வைத்து
நீட்டிட வேண்டுமென்று
சேற்றில் முளைத்த செந்தாமரை
உத்தரவு போட்டதாம்
கமலத்தின் ஆசையை
நிறைவேற்றா கதிரவக் காதலன்
வான மகளிடம்
முறையிட்டு பார்த்ததாம்
கதிரவனின் கதையைக் கேட்டு
கண்ணீர் விட்டு அழுதாள் வான மகள்
அது தான் மழையோ?

எழுதியவர் : சித்ரா ராஜ் (9-Feb-14, 7:57 am)
பார்வை : 189

மேலே