இயற்கை
காதோரம் கொஞ்சும் போது....
கடல் புகழ் சொல்லும் சங்கு...
இரவு நேரத்து நிலா நித்தம்....
இதயத்தில் வலம் வரும் உலா...
வானத்தில் வந்தமர்ந்து வண்ணக்
கோலமிடும் வானவில்.....
மலையின் மடியில் மழலையாய்
தவழும் நீர் அருவி....
இவைகளில் ஒன்றாய் இருந்திடவே....
இன்பத்தில் என்றும் திளைத்திடவே...
தினம் தினம் ஏங்கிடும் என்மனமே.....